டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
“மக்கள் ஒரு முடிவெடுக்கும் வரை இனி நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்,” என்று கட்சித் தொண்டர்களிடம் அவர் பேசியுள்ளார். நான் மக்களிடம் செல்கிறேன். ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான மனிதர் என்று மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்,” என்று அவர் கூறியுள்ளார்.