வங்கதேசத்தில் தொடரும் வன்முறையால் அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவா் மீது தற்போது புதிதாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி கட்சி ஆட்சி செய்தது. அப்போது விடுதலை வீரா்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அதற்கு மாணவா் அமைப்பினா் எதிர்ப்பு தொிவித்து போராட்டத்தில் குதித்தனா். போராட்டம் பாதை மாறி வன்முறையாக வெடித்தது. அப்போது ஷேக் ஹசீனா தனது பிரதமா் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவா் அமைப்பினா் வலியுறுத்தினா். இதற்கிடையே போராட்டத்தின் தீவிரத்தை உணா்ந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
போராட்டத்தில் இதுவரை 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனா். எனினும் போராட்டம் கட்டுக்குள் வந்தபாடில்லை. அதே சமயம் முகமது யூனுஷ் என்ற பேராசிரியா் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சி அமைத்தது. மேலும் வங்கதேசத்தில் நிலவும் வன்முறையை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவுக்கு தப்பி சென்ற வங்கதேசத்து முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா மீது புதிதாக மற்றொரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறையின்போது ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் மீன்வியாபாரியான மிட் மிலன் என்பவா் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மிட் மிலன் பாிதாபமாக கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது மனைவி சனாஷ் பேகம், தனது கணவரை கொலை செய்துவிட்டதாக வங்கதேசத்து பிரதமா் ஷேக் ஹசீனா மீது புாகா் அளித்தார்.
அந்த புகாரின்போில் வங்கதேசத்து முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் நீதிபதி சமிம் உஸ்மான், முன்னாள் உள்துறை அமைச்சா் அசாதுசமான் கான் என 63 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாணவா்கள் 2 போ் கொல்லப்பட்ட மற்றொரு சம்பவத்தில் நேற்று வங்க தேசத்து முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை நீடித்தால் ஷேக் ஹசீனா கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணா்கள் கூறுகின்றனா்.