சினிமா

தாய்லாந்தில் தாலிகட்டு.. வரவேற்பு சென்னையில்.. முதல்வர் எங்கு செல்வார்..?

  • June 8, 2024
  • 0

நடிகை வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனால் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் மற்றும் அவரது குடும்பம் அனைவரும் திருமண வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்த

தாய்லாந்தில் தாலிகட்டு.. வரவேற்பு சென்னையில்.. முதல்வர் எங்கு செல்வார்..?

நடிகை வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனால் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் மற்றும் அவரது குடும்பம் அனைவரும் திருமண வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி. இவர் தமிழ் சர்க்கார், சண்டைக்கோழி 2, மாரி, போடா போடி போன்ற படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானார். தற்போதும் டோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக இருந்து வருகிறார்.

38 வயதாகும் நடிகை வரலட்சுமி சரத்குமார், மும்பை சேர்ந்த தொழிலதிபரான நிகோலாய் என்பவரை கரம்பிடிக்க உள்ளார். நிகோலாய் ஏற்கனே திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவதாக நிகோலாயை திருமணம் செய்ய நடிகை வரலட்சு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமணம் ஜூலை மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. அதன்பின் வரவேற்பு நிகழச்சி சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் அரசியல் பிரபலங்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளில் தற்போது குடும்பமாக களமிறங்கியுள்ளனர்.

அந்த வகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், எம்.பி.கனிமொழி போன்ற பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைத்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்தனர். அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.