தவெக கட்சி கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என அறிவுறுத்தி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தொடங்கி இருக்கக்கூடிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழாவானது இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.