மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.
வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி உள்பட பெண்களுக்கான பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்து இருக்கிறார்.
கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சிக்காக பட்ஜெட்டில் ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக மூன்று வகையான வேலைவாய்ப்புத் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏ, பி, சி என மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Union Budget 2024-25 : தனிநபர் வருமான வரியில் மாற்றம்; நிரந்தர கழிவு ரூ.75,000 ஆக உயர்வு…
திட்டம் ஏ-யின் படி புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். திட்டம் பி-யின் படி தொழிற்சாலைகளில், குறிப்பாக உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். திட்டம் சி-யின் படி புதிய வேலைவாய்ப்பை உருவாக்க கம்பெனி உரிமையாளர்களுக்கு உதவிகள் செய்யப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சிறு மற்றும் குறு தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.