அரசியல் இந்தியா உலகம்

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

  • September 9, 2024
  • 0

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும் 37 பேர் காயமடைந்ததாக சுகாதார அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அந்த செய்தி முகமை கூறியிருந்தது.

பிரிட்டனை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழு, ‘இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், தாக்கப்பட்ட ஐந்து இலக்குகளில் ஆயுத உற்பத்தியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அறிவியல் ஆராய்ச்சி மையமும் உள்ளடங்குவதாகவும்’ தெரிவித்தது.

சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதல்களை ‘அப்பட்டமான ஆக்கிரமிப்பு’ என்று கண்டனம் தெரிவித்தது. இரானின் வெளியுறவு அமைச்சகம் ‘இது குற்றவியல் தாக்குதல்’ என்று கூறியுள்ளது.